இலங்கையில் உள்ள நபர் ஒருவரின் கையடக்கத்தொலைபேசி காணாமற்போகும் அல்லது திருடப்பட்டும் சந்தர்ப்பத்தில் தொலைபேசிகள் தொடர்பில் முறையிடுவதற்காக இலங்கை பொலிஷ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் விசேட இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தொலைபேசிகள் காணாமற்போனாலோ அல்லது திருடப்பட்டாலோ www.ineed.police.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என பொலீஸ் ஊடகப் பேச்சாளர், போலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் 24 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதுடன் நாளாந்தம் 800 முதல் 1000 கையடக்கத் தொலைபேசிகள் காணாமற்போவதாக முறைப்பாடுகள் பதிவாவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் கிடைக்கும் முறைப்பாடுகள், அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.