ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத்த் தெரிவித்தார். “எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்காமல், வெறுமனே ரணில் விக்ரமசிங்கவினுடைய பிரதமர் பதவியை உறுதிப்படுத்த வேண்டும், அவரைப் பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இவர்கள் ஒரு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.
இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி, தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்றி விட்டது. மீண்டும் நட்டாற்றில் விட்டு விட்டது. தமிழ் மக்கள் நலன் சார்ந்த, தமிழ் மக்களின் நீண்டகால அரசியலமைப்பு கோரிக்கைகள் சார்ந்த எந்த நிலைப்பாடுகளையும் இந்திய மேற்கு நாடுகளிடம் வலியுறுத்தாமல், ஏன் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்கியதன் மூலம், ரணில் பிரதமராவதற்கு தகுதியுடையவர் அவர் அந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார் என்ற ஒரு வெளிப்பாட்டை வெளிக்கொண்டு வருவதற்கு அவர்கள் துணை போயிருக்கிறார்கள்.
இந்தியா சார்ந்த மேற்கு நாடுகள் சார்ந்த ஒரு அரசைப் பாதுகாப்பது தான் அவர்களுடைய குறிக்கோளாக இருக்கிறதே தவிர, அதற்கு பதிலாக தமிழ் மக்களுடைய நலன்களை பலியிட்டுக்கொண்டே வருகிறார்கள்.
ரணிலை பிரதமாக்குவதன் மூலம் இராணுவத்தினரை வெளியேற்றி, இராணுவத்தினருடைய பிடியில் இருக்க கூடிய காணிகளை விடுவிக்க முடியாது. ஏனென்றால், ஜனாதிபதி தான் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியினுடைய உத்தரவிற்கு அமைய தான் பாதுகாப்பு துறை செயற்படும்.
ரணிலை ஆதரிப்பதனூடாக கைதிகளை விடுவிக்கப்போகிறோம் என்று அவர்கள் சொல்கிறோம் என்று சொல்கிறார்கள் என்றால், அது ஒரு ஏமாற்று நடவடிக்கை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.