பெரும்பான்மைக்கு அமைய செயற்படுவதே இந்நாட்டின் சம்பிரதாயம் என சபாநாயகர் கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் தமக்கு பிரச்சினை இல்லை என குறிப்பிட்ட இரா.சம்பந்தன், அவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருப்பாரா என்பதே பிரச்சினை எனவும் கூறினார்.
கொள்கையின் அடிப்படையிலேயே தாம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், நாட்டில் பெரும்பான்மையை நிலைநிறுத்துகின்ற தீர்மானமாக இதனைக் கருதுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.