உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் காளைகட்டத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், அமெரிக்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சில்ட்ரன்ஸ் நேஷனல் எனும் அமைப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பிரத்யேகமான கிறிஸ்துமஸ் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, கிறிஸ்துமஸ் தாத்தாவை போல் வேடமிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றை சில்ட்ரன்ஸ் நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது.