நேற்றைய தினம் தமிழ் மக்கள் கூட்டணி, கிளிநொச்சி மக்கள் நலன் காப்பகம் நடுவகப் பணியகத்தில் வைத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 100 பேரைத் தெரிவு செய்து, நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
இதன் போது முன்னாள் தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நாயகம், உரையாற்றினார். இவ்வுரையில், “மனிதாபிமான செயல்களில் ஈடுபடும் போது எமது வேற்றுமைகளையும், ஒற்றுமைகளையும் முதன்மைப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க பாடுபட வேண்டும் என தெரிவித்திருந்தார்”