வட்ஸப் சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 தடவைக்கு மேல் அனுப்புவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போலியான தகவல்கள் பரப்பப்படுவத்தைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வட்ஸப் குழுமம் இந்த நடவடிக்கையை இந்தியாவில் 6 மாதங்களுக்கு முன்னர் முன்னெடுத்திருந்தது.
வட்ஸப் சமூகவலைத்தளத்தில் ஒரே தகவலை 20 தடவைக்கு மேல் அனுப்பக்கூடிய வகையில் வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய நடைமுறை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.