செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிரும் காஷ்மீர் மீண்டும் தாக்குதல்

அதிரும் காஷ்மீர் மீண்டும் தாக்குதல்

1 minutes read

காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது மேற்கொல்லப்பட்ட தாக்குதலில் சூடு தணியும் முன்பே நேற்று ஜம்முகாஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புக்களை மீளப் பெற்றுக்கொள்வதாக ஜம்முகாஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

புல்வாமா – பிங்க்லானா பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் பரஸ்பர துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவி வந்த நிலையில் இந்தத் தாக்குதல் நேற்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ஜம்மு பகுதில் அமைந்துள்ள மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பிரிவினைவாதத் தலைவர்கள் ஐவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஜம்முகாஷ்மீர் நிர்வாகம் மீளப்பெற்றுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More