கடந்த 18ம் திகதி சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மருத்துவ அதிகாரி சிவரூபனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர் எனக்கூறி கைது செய்தி யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு அதன் பின் மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டிருக்கின்ற நிலையில்.
மருத்துவர் சிவரூபன் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுடன் சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பை வெளிக்கொண்டிருந்தவர்.
இது தொடர்பாக கரச்சி பிரதேச செயலாளர் வேளமாகீதன் கூறிய போது ஒரு நீதி வைத்திய அதிகாரியாக திரு சிவரூபன் அவர்கள் போரின்போதும் போரிற்கு பினனும் நடந்த சித்திரவதைகள் படுகொலைகளை வெளிக்கொணர்ந்தவர் எனக்குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி சிறிலங்காவின் ஒட்டுக்குழுக்களின் பாலியல் வல்லுறவுகள் கொலைகள் என்பவற்றுக்கான ஆதாரங்களை வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அது மட்டுமின்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் மருத்துவர் சிவரூபனை ஈபிடிபியினர் தமக்கு விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை காட்டித்தரும்படி சிவரூபன் அவர்களை அழுத்ததுக்கு உள்ளாகியது வெளி வந்துள்ளது.
குறிப்பாக சவேந்திர சில்வா பதவியேற்ற பிறகு நடந்திருக்கும் இந்த கைது எதிர்காலத்திலும் இனவழிப்பு போர்க்குற்றங்களுக்கு எதிராக ஆதரங்களை திரட்டுபவர்களையும் இலக்குவைக்கும் என்பதில் மாற்றமில்லை.