யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று இரவு(26) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுலள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அப்பகுதியில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபரை மறித்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவினை மீட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞன் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.