மாணவர்கள் ஆசிரியையை தாக்கியது வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் மேலாளர் கூறும்போது, ஆசிரியை மம்தாதுபே மாணவர்களை ‘அனாதைகள்’ என திட்டி உள்ளார். அவர் வழக்கமாக மாணவர்களை திட்டிக் கொண்டேதான் இருப்பார். என்றார்.
ஆனால் மம்தா துபே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
பள்ளி நிர்வாகம் என்னை முன்பு ஒரு முறை பணி நீக்கம் செய்தபோது, கலெக்டர் உதவியுடன் நான் மீண்டும் பணியமர்த்தப்பட்டேன். தற்போது கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் என்னை பணி நீக்கம் செய்ய மேலாளர் முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.