மாவீரர் தினமான நேற்றைய தினம் மட்டக்களப்பில் கானகன் என்ற ஒரு முன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மட்டக்களப்பு – ஆரையம்பதியில் உள்ள செல்வா நகர் கிழக்கில் ஏர் டெல் டவர், காளிகோவில் வீதியில் வசித்துவந்த இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி நிர்வாக பிரிவில் காணிப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
2009 யுத்தம் நிறைபெறும் வரையில் வன்னியில் இருந்த இவர், ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் தன்னுடன் இருந்த போராளிகளை நினைத்து மனவேதனை பட்டுவந்ததாகவும், மிகுந்த மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.