உடுமலை கௌசல்யாவின் தாய் மற்றும் பாட்டி பழனியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி அருகே உள்ள குப்பம்பாளையம் பகுதியில் பழனி தாலுகா காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த போதையம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், போதையம்மாளுக்கு அவரது மகள் அன்னலட்சுமி கஞ்சா வழங்கியது தெரிய வந்தது. இதனையடுத்து பழனி, எம்ஜிஆர் நகரில் வசித்து வந்த அன்னலட்சுமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் உடுமலையில் ஆணவக்கொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யாவின் தாயார் மற்றும் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.