2
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக அரும்பொருள் காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படவிருக்கிறது.
இது, சுமார் 12 பரப்புக் காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் இருவரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளன.
அத்துடன், முன்னோர்கள் பயன்படுத்திய வண்டில்கள் – கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் போன்ற பாரம்பரியமிக்க பல்வேறு அம்சங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரும்பொருள் காட்சியகத்தை பார்வையிட வருவோருக்கு, முதல் மூன்று நாள்களும் இலவச அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் இந்த அரும்பொருள் காட்சியகத்தைச் செயற்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு 50 ரூபாவும் ஏனையோருக்கு 100 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.