நெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவு இன்று பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பற்றிக்டி றஞ்சன் அவர்களது தலமையில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தினது அங்கத்தவர்கள் எவரும் தெரிவுக் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.
ஈழமக்கள் ஜனநாயக்கட்சியினது 06 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர், சுயேட்சை குழுவின் இரண்டு உறுப்பினர் உட்பட 09 உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
தற்போது தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி பிரதிநிதி நல்லதம்பி சசிகுமார் அவர்களும் உபதவிசாளராக சந்தியாப்பிள்ளை தோமஸ் செல்வராஜ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கடந்த இரண்டு வருடங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அதிகாரம் பெற்று எந்தவித முன்னேற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து வந்த வேளையில் தற்போது ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வசம் பிரதேசசபை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.