செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளி.

மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளி.

1 minutes read

பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

பூமியிலிருந்து 124 ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்றழைக்கபடும் எக்ஸோபிளானட் கிரகமானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது. இது பூமியை விட கணிசத்தில் பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது. இதன் ஆரம் 2.6 மடங்கு மற்றும் பூமியின் நிறை 8.6 மடங்கு ஆகும். K2-18b கிரகமானது K2-18 என்ற சிவப்பு நடசத்திரத்தை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிபகுதி நிலைகளும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எக்ஸோபிளானட் கிரகத்தில் ஹைட்ரஜன் உறைகளின் தடிமன் மற்றும் ஆழத்தினை கண்டறிந்ததில் அதன் அதிகபட்ச அளவு 6 சதவீதமாகும் என்று உறுதி செய்துள்ளனர். வளிமண்டலத்தில் கணிசமான அளவு நீராவியுடன் ஹைட்ரஜன் அதிகம் இருப்பதால் அம்மோனியா,மீத்தேன் போன்ற வேதிப்பொருட்களின் அளவு குறைவாகவே இருக்கும். இதற்கு உயிரியல் செயல்பாடுகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர். வளிமண்டலத்தின் கலவை மற்றும் கட்டமைப்பை விரிவுபடுத்தி கட்டுபடுத்துவதற்கு வளிமண்டல கலவை, அளவு மற்றும் நிறையை அவதானித்து வந்துள்ளனர். எண் மாடலிங் மற்றும் புள்ளிவிவர முறைகளை பயன்படுத்தி வளிமண்டலத்தின் உள் அமைப்பு மற்றும் வெப்ப இயக்கவியலை கட்டுபடுத்தினர்.

எக்ஸோபிளானட் K2-18b கிரகமானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More