சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுலாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் தமிழ் மக்களைம் அழிக்கும் வகையிலையே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்லா சதுர்க்கத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் மேலும் தெரிவித்ததாவது…
சுமந்திரன் தான்தோன்றி தனமான முடிவுகள் எடுப்பதை கட்சியில் உள்ள அனைவரும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . இவ்வாறு அனைவரும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்பது தெரியாமல் இருக்கின்றது.
தந்தை செல்வா செல்லியிருந்தார் தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என ஆனால் சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுலாலும் காப்பாற்ற முடியாது. யாழ்ப்பாண மக்களை அழிப்பதற்காக சுமந்திரனை உருவாக்கி விடப்பட்டுள்ளதா என நான் கேட்க விரும்புகின்றேன்.
இதன் போது விமலேஸ்வரி கருத்து தெரிவிக்கையில்..
2010 ஆண்டு சுமந்திரன் இலங்கைத் தமிழரசு கட்சிக்குள் வரும் போது இவருடைய வரவு ஒரு ஆபத்தானது என அன்றே கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட் மகளிர் அணி செயலாளர் சி.விமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.
நிட்சயமாக சுமந்திரன் தேர்தலில் தோல்வியடைவார் எனவும் அவ்வாறு தோல்வியடையும் போது தமிழரசு கட்சி தேசியப்பட்டிலல் கொடுக்காவிட்டாலும் பெரும்பான்மையின கட்சிகள் ஒரு இடத்தை கொடுக்கும் என சி.விமலேஸ்வரி மேலும் தெரிவித்துள்ளார்.