0
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 22 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த 73 வயது ஆண் தற்போது கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.