மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியான இனம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சாஜன்ட் சுனில் ரத்னாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக அரசின் ஊடகமான ஐ.ரி.என் தெரிவித்துள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி சட்டமா அதிபரால் இவர் மீது 19 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தேவகுலசிங்கம், விலவராஜா பிரதீபன்,சின்னையா வில்வராஜா,நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞானச்சந்திரன், ஞானச்சந்திரன் சாந்தன்மற்றும் வில்வராஜா பிரசாத் ஆகிகோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றின் ட்ரயல் அட்பார் பெஞ்சில் விசாரணை நடைபெற்று வந்தது.
நடைபெற்ற வழக்கில் ட்ரயல் அட்பார் பெஞ்ச் முன்னாள் இராணுவ அதிகாரி சாஜன்ட் சுனில் ரத்நாயக்கவை குற்றவாளியாக இனம் கண்டது.இந்தநிலையில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவருக்கு பொதுமன்னிப்பு அளித்தநிலையில் அவர் தற்போது சிறையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.