சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றினால் 718,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்து போதிலும், Michael Levitt சில உண்மையான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
இதனால் விஞ்ஞானி Michael Levitt கூறிய கருத்து தொடர்பில் பலரும் கவனம் செலுத்தியுள்ளனர். சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று Michael Levitt அவர்கள் மதிப்பிட்டு கூறியிருந்தார். அவரின் கூற்றின் படியே, சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, விஞ்ஞானி Michael Levitt வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் பலரும் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.