புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனா இயற்கையா? செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

கொரோனா இயற்கையா? செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

2 minutes read

 

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே பரவி இருக்க வேண்டும் என்றும் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து பாதிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

நேச்சர் மெடிசின் இதழில் இது குறித்த செய்தி வெளியாகி உள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்படுவதற்கு முன்பே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

உண்மையில், இது பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படி நடந்திருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன.

இந்த வைரஸ் விலங்குகளுக்கு உருவாகி மனிதனுக்கு பரவி, பின்னர் பல ஆண்டுகளாக படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவாக, இந்த வைரஸ் இறுதியில் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவி தீவிரமாகி இருக்கிறது.

பெரும்பாலும் இந்த கொரோனா வைரஸ் வகைகள் உயிருக்கு ஆபத்தான நோயை உருவாக்கும் திறனைப் பெற்றது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார்.

பல விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வை நடத்தினர். சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இந்த ஆய்வு மார்ச் 17 அன்று நேச்சர் மெடிசின் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

மரபணு வரிசை இந்த ஆய்வின் முடிவில் “நம்மால் அறியப்பட்ட கொரோனா வைரஸ்களில் உள்ள மரபணு வரிசை தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததில் SARS-CoV-2 இயற்கையாகவே உருவானது என்பதை நாம் உறுதியாக தீர்மானிக்க முடியும்” என்று முன்னணி ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விளக்கம் அளித்துள்ளார்.

இது ஒருபுறம் எனில், இத்தாலிய பேராசிரியர் கியூசெப் ரெமுஸி கடந்த நவம்பரிலிருந்து இத்தாலியில் “விசித்திரமான நிமோனியா வைரஸ்” பரவி வருவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால் அதை பற்றி மக்கள் பலரும் அறியும் முன்பே கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஐரோப்பாவை அடைந்திருக்கலாம் என்று சொல்கிறார்.

பேராசிரியர் ரெமுஸியைப் போலவே பேசிய சீன மருத்துவர், பெய்ஜிங்கில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார், இவர் கூறும் போது,

கடந்த ஆண்டு பல நாடுகளில் நிமோனியா வைரஸ் பரவியது குறித்து நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே “முழு விஷயமும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்” என்றார்.

உலகுக்கு அறிவித்துள்ளது மற்ற நாடுகளைப் போலவே சீனாவின் வுஹானில் உள்ள டாக்டர்களும் டிசம்பரில் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனித்திருக்கிறார்கள்.

ஆனால் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவிய சிறிது காலத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் மரபணுவை வரிசைப்படுத்தி, அந்த தகவலை உலகளவில் ஆராய்ச்சியாளர்களுக்குக் உடனே கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த வைரஸ் உடனடியாக தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவியதால் இப்போது உலகின் மூலை முடுக்கெல்லாம் பல லட்சம் பேரை பாதித்து உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More