கொரோனா வைரஸ் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு சில மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட போதும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த அபாய வலயங்களுக்குள் யாழ் மாவட்டமும் அடங்குகின்றது. ஆகவே யாழில் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக்கொள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் வங்கியில் பணம் எடுப்பதும் மக்களது அத்தியாவசிய தேவையாக உள்ளது. எனினும் வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் ஏ.டி.எம் இயந்திரத்தையே மக்கள் நாடுகின்றனர். ஊரடங்கு வேளைகளில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பதும் சிக்கலான ஒன்றாக உள்ளது.
இதை நிவர்த்தி செய்யும் வகையில் வங்கி ஒன்று முன்வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு வாசலுக்கே ஏ.டி.எம் இயந்திரத்தை கொண்டு வருகின்றது தனியார் வங்கி.
இந்த வங்கி யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று மக்களுக்கு தமது சேவையை வழங்குகின்றது. மக்களும் இதன்மூலம் அதிக பயனடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. வரிசையில் நின்று பணம் எடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
நேற்று ஆரம்பித்த இந்த சேவை இம்மாதம் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளது. அந்த வகையில் குறித்த 10 தினங்களுக்கும் வரும் இடங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.