மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளியான சிவநாதன் அருந்ததி ( இன்று அதிகாலை சாவடைந்துள்ளார்.
கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொன்ட இவர் கடந்த 03.02.1999. அன்று மாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது ஷெல் வீச்சு காரணமாக விழுப்புண் அடைந்தார்.
நீண்ட காலமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையினை சக்கர நாற்காலியுடனே வாழ்ந்து வந்தவர்.
இவருடைய கணவரும் ஒரு முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது (இவரும் மாற்று திறனாளிகள் ) இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் உண்டு. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சுவிஸில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியைச் சேர்ந்த த.கஜேந்தினி (வயது-35) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சுவிஸ் நாட்டில் செங்காலன் என்ற மாவட்டத்தில் வசித்து வந்த இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது இரு கால்களையும் இழந்திருந்தார்.
அத்துடன் உடலில் சில நோய்களும் இருந்ததுடன், சுவாசப் பிரச்சினையும் இருந்துள்ளதாலும் இவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் பிரபல அரசியல் எழுத்தாளர்களுக்கு அரசியல் கட்டுரைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் எழுதுவதற்கு உதவி செய்துள்ளதுடன், வலைத்தள வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.