எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு வேளைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்மட்ட தகவல்களை சுட்டிக்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் சுகாதார அதிகாரிகளின் முன்மொழிவை கொண்டு அரசங்கம் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது, சமூக இடைவெளி போன்ற இறுக்கமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது இடர் வலையங்களாக இருக்கும் யாழ்ப்பாணம், கொழும்பு, கமபஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 4 மாவட்டம் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகின்றது.
அந்தவகையில் இடர் வலைய மாவட்டம் தவிர்ந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு ஊரடங்கினை அமுல்படுத்தி காலை 6 மணிக்கு நீக்குவது குறித்து சுகாதார அதிகாரிகளினால் அரசாங்கத்திற்கு முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.