1
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் பல நூறு மீற்றர் உயரத்துக்கு மணல் புயல் வீசியதன் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. தலைநகர் நியாமியில் வீசிய புயலால், கட்டிடங்கள் அனைத்தும் சிவப்பு நிற தூசுகளால் மூடப்பட்டன. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் வறண்ட காலங்களில் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மணல் புயல்கள் வீசுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.