1
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா, பெறுமதி சேர் வரியை (VAT) 3 மடங்கு உயர்த்தியுள்ளது.
மேலும், வாழ்க்கை செலவு கொடுப்பனவை முற்றிலும் இரத்துச் செய்தும் சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ் வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே குறைபெறுமதியிலிருந்த கச்சா எண்ணெய் விலை, கொரோனா வைரஸ் தொற்றால் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.