தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
கல்முனை பகுதியில் இன்றையதினம் முற்பகல் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று பல அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள்.
ஆனால் இடையிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர்கள் ஊடகங்களுக்கு அவ்வப்போது விடுதலை புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
சுமந்திரன் போன்றோர்களை இன்னும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என வடக்கு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரன் போன்றவர்களுக்கு இம்முறை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று கொண்டு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் நாடாளுமன்ற கதிரையை வெறுமனே அலங்கரித்து கொண்டு வருகின்ற சிங்கள தலைவர்களுடன் கைகோர்த்து ஏட்டிக்கு போட்டியாக தமிழ் மக்களை விலை பேசி வருகின்ற கூத்தாடிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறந்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கும் அதே வேளை சுமந்திரன் போன்ற கறுப்பாடுகளை களைந்தெறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.