இரத்தினபுரியிலுள்ள பிரதேசம் ஒன்றில் அடையாளம் காணப்படாத திரவ சொட்டுகள் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொடகவெல பிரதேச சபைக்கு அருகில் இன்று பிற்பகல் 1.30 மணியவில் இவ்வாறு மழை பெய்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் 10 பெர்சஸ் காணி முழுவதும் இந்த திரவ சொட்டுகள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 – 10 நிமிடங்கள் வரையில் இவ்வாறு மஞ்சள் நிறத்தில் திரவ சொட்டுகள் விழுந்துள்ளன.
இந்த திரவ சொட்டுகள் பூமியில் விழுந்தவுடன் காய்ந்து போயுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.