எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த க.பொ.த. உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடங்களின் பரிந்துரை பகுதிகளை குறைத்து வினாத்தாள்களை தயாரிக்க உள்ளதாக கல்வியமைச்சு இதற்கு முன்னர் கூறியிருந்தது.
எனினும் பரீட்சையின் தரத்தை குறைக்க வேண்டாம் என சில துறைகளிடம் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 278 மாணவர்கள் தோற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#A/L #exam #education #பரீட்சை #கல்வி #கல்வியமைச்சு