தமிழீழ கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்க முற்படலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய (05) தினம் கைது செய்யப்பட்டார் என்று அறிய முடிகிறது.
ஜூலை (05)ஆம் திகதி தமிழீழ கரும்புலிகள் நாளாகும். இன்றைய (05) தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் வடமராட்சியில் பெரும் பகுதிகளில் இராணுவத்தினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்ட முற்பட்ட போது, கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் பருத்தித்துறை நீமன்றால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையிலேயே தன்னை இன்றைய (05) தினம் பொலிஸார் கைது செய்தனர் என்று எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.