ஏழையின் மின்விளக்கு
பாமரனுக்கும் படிப்பு குடுத்த ஒளிவிளக்கு
பல்கலையும் பெற்றான்
பட்டமும் பெற்றான்
உயிர் உள்ளவரை ஒளிகொடுத்த
மேதை அவன்
மார்தட்டிக்கொண்டதில்லை
தன் உயிரோடு நிழலாடி இன்னொருவன் வாழ்வை பிரசவித்த தாயவள்
கொட்டகைக்குள் குளிர்காய வைத்த சூரியன்
சிறுவர் தீண்டா சிற்றொளி அவன்
ஊற்றியவர் உறங்கும் வரை ஒளி கொடுத்தான்
எம்மவன்
வாழ்வில் மின்சாரம் காண வயதில்
நாம் கண்ட மின்குமிழ்
கண்சிமிட்டும் கனவுகளை அள்ளித்தந்த
சிற்றொளி சீவன்-அவன்
அழியா வாழ்வளித்த அரும் பெரும் கொடையாளி
தேடி கிடைக்கா தேன் கனவு
விட்டே செல்கிறோம் உறவாடிய நாட்களை-இனிமேல்
தொடரா உன் தீபம்-உன்னை
தெரியாத வரும் வளர்காலம்
என்றும் உன் நியாபகங்களுடன் நாம்…..
கேசுதன்