நீர் வெறுப்பு நோய் (Rabies) காரணமாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய்க்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் டொக்டர் L.D.கித்சிறி தெரிவித்தார்.
விலங்குகளுக்கு இதற்கான தடுப்பூசிகள் உள்ளதால், விரைவில் நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு இதனை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நீர் வெறுப்புநோயினால் வருடத்தில் 20 முதல் 30 மரணங்களே பதிவாகின்ற போதிலும்,
இந்த வருடத்தில் கடந்த 5 மாதங்களில் மாத்திரம் 12 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.