முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா என்று அழைக்கப்படும் மணலாறு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிங்கள மக்கள் இனிவரும் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் உள்ளீர்க்கப்படுவார்கள் என்று தெரியவருகின்றது.
வெலிஓயா பிரதேச செயலகம் முல்லைத்தீவு மாட்டத்தின் நிர்வாகத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், நிலப்பரப்பும் முல்லைத்தீவின் எல்லையினுள் அமைந்துள்ளது. எனினும், கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கே தமது வகை அளித்தனர்.
எனவே, புதிய எல்லை நிர்ணயத்தில் குறித்த மக்களை முழுமையாக முல்லைத்தீவுடன் இணைக்குமாறு முல்லைத்தீவு நிர்வாகத்தால் கோரப்பட்டிருந்து. இது தொடர்பாக வவுனியாவில் நேற்று நடைபெற்ற புதிய எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அதனடிப்படையில் நிக்கவௌ வலது, நிக்கவௌ இடது, கஜபாபுர, கல்யாணபுர கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் 2 ஆயிரத்து 233 குடும்பங்களைப் புதிய எல்லை நிர்ணயத்தினூடாக முல்லைத்தீவுக்குள் இணைப்பதற்குப் பரிசீலிக்கப்பட்டுள்ளது.