தொழில்நுட்பக் கோளாறால் சிறிது நேரம் செயலிழந்த 999 சேவையானது தற்போது இயங்கி வருவதாக பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
லண்டன்வாசிகள் அவசரகாலத்தில் 101ஐ அழைக்கவும், மறு அறிவிப்பு வரும் வரை அவசரமற்ற அழைப்புகளைத் தவிர்க்குமாறும் கூறப்பட்டது.
BT ஆல் இயக்கப்படும் 999 சிஸ்டம் – ஞாயிற்றுக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, BT இன் செய்தித் தொடர்பாளர், back up platform தொடர்ந்து செயல்படுவதாகவும், மக்கள் வழக்கம் போல் 999 ஐ அழைக்கலாம் என்றும் கூறினார்.
இந்த நிலையில், சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக மெட் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.