அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் மேலும் ஒரு இந்தியர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அதேபோல் குடியரசு கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
அதே சமயம் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பை தவிர்த்து இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி உள்பட 13 பேர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்த வம்சாவளி என்ஜினீயரான ஹிர்ஷ் வர்தன் சிங் (38) குடியிரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.