உக்ரேனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை திரும்பப் பெருமாறு சிங்கப்பூர் உணவு அமைப்பு, கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த முட்டைகளில் Salmonella Enteritidis எனும் பாக்டீரியா இருப்பது தெரியவந்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
LCC Yasensvit பண்ணையிலிருந்து இந்த முட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றில் CEUA001 என்ற முத்திரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினை சரிசெய்யப்படும்வரை அந்தப் பண்ணை சிங்கப்பூருக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்யத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியுள்ளது.
ஏற்கெனவே முட்டைகளை வாங்கியிருப்போர் அவற்றை முழுமையாகச் சமைத்தபிறகு உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவற்றை உட்கொண்டபிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே மருத்துவ உதவியை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.