3
தென்னிலங்கையில் இன்று ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, இரத்மலானை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பான மேலதிக விபரம் வெளியாகவில்லை.