தலங்கம – நெரலு உயன பகுதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தின் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
உயிரிழந்தவர் 46 வயதுடைய உளநல மருத்துவர் ஒருவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்றிரவு இந்தச் சடலம் விடுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் வெளியிட்டுள்ள தலங்கம பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.