2001ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம், தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ். இத்திரைப்படம் உலகெங்கும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் பல பாகங்கள் தொடர்ந்து வெளிவந்தன.
இத்திரைப்படத்தில் இணை கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர், வின் டீசல் . இவர் ஒன் ரேஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
வின்னின் அலுவலகத்தில் பணி புரிந்த அஸ்டா ஜொனாஸ்ஸன் எனும் பெண், வின் டீசல் மீது அஸ்டா பாலியல் குற்றம் சாட்டி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
“ஒன் ரேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் போது, அட்லான்டா மாநிலத்தில் ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வின் டீசல் முறையற்று நடக்க முயன்றார். அங்குள்ள ஒரு குளியலறையை நோக்கி நான் பயந்து, அலறி கொண்டே ஓடினேன்.
ஆனால் வின் டீசல் என்னை விடாமல் பலவந்தமாக பாலியல் ரீதியாக தாக்கினார். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.” என்று கூறியுள்ளார்.
எனினும், 9 நாட்களே வேலையில் இருந்த ஒரு பணியாளர் 13 வருடங்களுக்கு முன் நடந்ததாக கூறும் இந்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என வின் டீசல் தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.