செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி

1 minutes read

டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்ததுடன், மேலும், 5 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“உடனடியாக தீயணைப்புத் துறை சம்பவ இடத்துக்குச் சென்றபோது அருகிலிருந்த கட்டிடத்துக்கும் தீ பரவி இருந்தது. ஆனால், அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இன்று காலை தீ அணைக்கப்பட்டது” என்று பொலிஸார் கூறினர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மருத்துவமனைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் விபத்தில் வெடித்துச் சிதறி தீயை மேலும் தூண்டியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More