இலண்டன் உட்பட இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் வெப்ப சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 30C ஆக உயரக்கூடும்.
வடக்கு கிழக்கைத் தவிர ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, சில பகுதிகள் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையில் “குறிப்பிடத்தக்க தாக்கங்கள்” ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த வாரம் முழுவதும் லண்டனில் வெப்பநிலை 27C ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர்ச்சியான மற்றும் சற்று மேகமூட்டமான வாரயிறுதிக்குப் பிறகு, தலைநகர் திங்கட்கிழமை முதல் சூரிய ஒளியில் மூழ்கும்.
வானிலை அலுவலகத்தின் சுகாதார எச்சரிக்கை திங்கள் காலை முதல் நடைமுறைக்கு வருவதுடன் வியாழன் பிற்பகல் வரை அமுலில் இருக்கும்.
தென்கிழக்கு, கிழக்கு மிட்லாண்ட்ஸ், இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் கிழக்கு ஆங்கிலியா ஆகிய பகுதிகளுக்கு மிக வலுவான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.