பிரித்தானிய தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில் எதிர்கட்சியான தொழிற்கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தக் கட்சி 410 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்து சுமார் 240 இடங்கள் பறிபோகலாம் என்று கூறப்படுகின்றது.
நாடு முழுதும் மொத்தம் 650 தொகுதிகளில் 40,000 அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில், வாக்குகள் இன்னமும் எண்ணப்பட்டுவருகின்றன.
தேர்தலுக்குப் பிந்திய கருத்துகணிப்புகளின்படி தொழிற்கட்சி வெற்றிபெற்றால், அதன் தலைவர் கெர் ஸ்டாமர் பிரிட்டனின் அடுத்த பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.