இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன், ஏனைய கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் 19,145 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார் உமா குமரன். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4 ஆவது இடத்தைப் பெற்றார்.
ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்பி ஆவார் என்பதுடன், இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன். குயின் மேரி பள்ளியில் படித்தவர், ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார்.