இங்கிலாந்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து தேர்தல் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்த வெற்றியை அடுத்து, புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீர் ஸ்டாமர் பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
மேலும், தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் தனது இராஜினாமா உரையை நிகழ்த்திய ரிஷி சுனக், புதிய பிரதமராகப் பதவியேற்கும் சர் கீர் ஸ்டார்மருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ரிஷி சுனக் தனது இராஜினாமா உரையை “மன்னிக்கவும்” என்று கூறி தொடங்கினார்.
அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகப் போவதில்லை என்று கூறினார்.
“உங்கள் கோபம், உங்கள் ஏமாற்றத்தை நான் கேட்டேன், இந்த இழப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன்.” என்றார்.