சனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய இலண்டனில் கூடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்கட்சி அரசாங்கம் காஸாவின் நிலைமை குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
பாலஸ்தீன ஒற்றுமை பிரசாரத்தின் (பி.எஸ்.சி) ஆதரவாளர்கள் Porticullis House நோக்கிய அணிவகுத்துச் செல்வதற்கு முன் ரசல் சதுக்கத்தில் கூடினர்.
ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள், பலஸ்தீனக் கொடிகளை ஏந்தியபடியும், ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் பதாகைகளையும் ஏந்தியவாறும், தெருவில் கூடியிருந்தனர்.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்த்து, தலைநகர் முழுவதும் 700 பொலிஸ் அதிகாரிகர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
எனினும், திட்டமிடப்பட்ட இஸ்ரேலுக்கு ஆதரவான எதிர்ப்புப் போராட்டம் இரத்து செய்யப்பட்டதாகவும் அது நிறைவேறவில்லை என்றும் கூறப்படுகிறது.
டவுனிங் தெருவைச் சுற்றி வளைத்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை, கலைந்து செல்லுமாறு பொலிஸார் எச்சரித்தனர்.
அத்துடன், ஒரு நபர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியிருந்தனர்.