வடக்கு இலண்டனில் 3 பெண்களை கொலை செய்த சந்தேக நபர் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வீடொன்றில் மூன்று பெண்கள் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றவாளிக்கு எதிரான வேட்டை முடிவுக்கு வந்துள்ளதாக பொலிஸாரால் தெரிவித்தனர்.
26 வயதான கைல் கிளிஃபோர்ட் என்ற சந்தேக நபரை துப்பறிவாளர்கள் மற்றும் பொலிஸார் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடர்ந்து தேடினார்கள்.
61 வயதான கரோல் ஹண்ட் மற்றும் அவரது மகள்கள் ஹன்னா (28) மற்றும் லூயிஸ் (25) ஆகியோர் கொலை செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 26 வயதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வந்தனர்.
கடுமையான தேடுதலுக்கு பிறகு, அதிகாரிகள் கிளிஃபோர்ட்டை அவரது வீட்டுக்கு அண்மித்த பகுதியில் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்தவர் என்றும், அவர் 2022 இல் ஒரு குறுகிய கால சேவைக்குப் பிறகு இராணுவத்தை விட்டு வெளியேறினார் என்று நம்பப்படுகிறது.