தெற்கு இலண்டனில் உள்ள குடியிருப்பு தெருவில், துப்பாக்கி ஏந்திய நபர் காரில் இருந்து சிறுவர்கள் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனையடுத்து, ஆயுதமேந்திய அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.
புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு முன்னதாக லாம்பெத்தின் அடிலெய்ட் குளோஸில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து பொலிஸார் அங்கு திரண்டனர்.
சம்பவ இடத்திற்கு சிறப்பு தேடுதல் குழு அனுப்பப்பட்டதுடன், அங்கிருந்து தோட்டா உறை மீட்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை தேடும் பணியில் அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
எனினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.