உக்ரேனுடனான 3 எல்லைப் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ரஷ்யா, ஆரம்பித்துள்ளது.
சண்டை கடுமையாகும் வேளையில், பெல்கரோட், பிரையன்ஸ்க் மற்றும் கர்ஸ்க் ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாதுகாப்புப் படைகளுக்கும் இராணுவத்திற்கும் நெருக்கடிக்கால அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அதிகாரிங்களின்படி, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்படலாம் என்பதுடன், நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும்.
அத்துடன், சோதனைச்சாவடிகள் நிறுவப்படுவதுடன் போக்குவரத்து அனுமதியற்ற பகுதிகளும் அறிவிக்கப்படும்.
இதேவேளை, சண்டை நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நகரங்களில்-இருந்து சுமார் 76 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.