தீவிர வலதுசாரி நடவடிக்கையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் Met’s Derrorism Command இன் விசாரணையைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் பயங்கரவாதக் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கிழக்கு லண்டனில் உள்ள Ilford பகுதியைச் சேர்ந்த Rex Clark (18) மற்றும் Hertfordshire, Cheshunt ஐச் சேர்ந்த Sofija Vinogradova (19) ஆகிய இருவர் மீதும் பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
எனினும், சவுத்போர்ட் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த கலவரங்களுடன் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்புடையவை அல்ல என்று பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.