வடக்கு இலண்டனில் பொலிஸ் துரத்தலின் போது வேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை 5.25 மணியளவில் சென்ட்ரல் மிடில்செக்ஸ் மருத்துவமனைக்கு வெளியே பார்க் ராயல் வீதியில் மூன்று ஆண்களுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
அப்போது அந்த காரை மெட் பொலிஸார் பின்தொடர்ந்து வந்தனர்.
என்ன நடந்தது என்பது குறித்து சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலக படை (IOPC)அறிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ்கள் அழைக்கப்பட்டதுடன், மூன்று ஆண்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 17 வயது சிறுவன், மருத்துவமனையில் இறந்ததாக திங்கட்கிழமை மாலை மெட் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அத்துடன், மற்ற இரண்டு பேர் மருத்துவமனையில் உள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் மோசமாக சேதமடைந்த சிவப்பு கார் இருந்ததை விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.