இந்திய அணிக்கு எதிராக மெல்போனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் 7 வயது சிறுவன் ஒருவன், ஆஸ்திரேலிய அணியின் இணை கப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
நடைபெற்று முடிந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 7 வயதான ஆர்ச்சி ஸ்கில்லர் என்ற சிறுவன் 15 ஆவது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த வலைப் பயிற்சியிலும் ஆஸ்திரேலியா வீரர்களுடன் இந்த சிறுவன் பங்கேற்றான். ஆஸ்திரேலிய அணியின் 15 வது வீரராக சிறுவன் சேர்க்கப்பட்டதற்கு, அவ னது உடல்நிலைதான் முக்கிய காரணம்.
ஆர்ச்சி பிறக்கும்போது அவனது இதயத்துடிப்பு சீரின்றி இருந்துள்ளது. அப்போது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவனது ஆயுட்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன் ஆர்ச்சி, ஆஸ்திரேலியா அணியின் காப்டனாவதே தனது கனவு என தெரிவித்துள்ளார். தன் மகனின் கனவை நனவாக்கும் முயற்சியில் அவனது பெற்றோர் ஈடுபட்டனர்.
சிறுவனின் ஆசை குறித்து அறிந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், இந்திய அணிக்கெதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் 15 வது வீரராக அவரை அணியில் தேர்வு செய்துள்ளது.
அப்போது அணியில் சேர்ந்து நீ என்ன செய்ய போகிறாய் என சிறுவனிடம் கேட்டபோது, “இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கி விக்கெட் எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.